தவறுகள் உணர்கிறோம்
உணர்ந்ததை மறைக்கிறோம்
மமதைகள் இறந்திட
மறுபடி பிறந்திடுவோம்
ஒரே வலி...
இரு இதயத்தில் பிறக்குதே
ஒரே துளி...
இரு விழிகளில் சுரக்குதே
ஒரே மொழி...
நீ இழந்ததை அடைந்திட
அணைந்ததை எழுப்பிட
உலகத்தில் உண்டு இங்கே....
சுவர்களை எழுப்பினோம் நடுவிலே,
தாண்டிச் செல்லத் தானே இங்கு முயல்கிறோம்.
உறவுகள் உடைந்திடும் எளிதிலே,
மீண்டும் அதை கோர்க்கத்தானே முயல்கிறோம்.
சில உரசலில் பொறி வரும்
சில உரசலில் மழை வரும்
நாம் உரசிய நொடிகளில்
பரவிய வலிகளை
மறந்திட மறுக்கிறோம்
( Karky )
( Karky )
No comments:
Post a Comment